தலைமுடி சீவும் போது முடி வேர்களுடன் கொட்டுகிறதா


 தலைமுடி சீவும் போது முடி வேர்களுடன் கொட்டுகிறதா


இதற்கும் போதிய அளவு புரோட்டீன் சத்து கிடைக்காததே இதற்கு காரணம், இதனை சரிசெய்ய பாட்டி வைத்தியத்தில் வழி இருக்கு 100% முடி கொட்டுவதை நிறுத்தி, கொட்டிய இடத்தில் அழுத்தமான நல்ல முடியை வளரச் செய்ய முடியும்.

முட்டையின் வெள்ளை கரு மற்றும் எலுமிச்சை சாறு :

இதுபோன்ற புரோட்டின் சத்து குறைந்து முடி உதிரும் போது ஒரு முட்டையின் வெள்ளைக்கருவுடன், ஒரு எலுமிச்சம் பழத்தின் சாற்றை பிழிந்து நன்றாகக் கலக்குங்கள் இந்தக் கலவையை தலையில் பூசி காய்ந்ததும் ஷாம்பு போட்டு குளிக்க வேண்டும் வாரம் ஒரு முறை இப்படி குளித்து வர முடி உதிர்வது நின்று கருகருவென வளரத் தொடங்கும் இந்த முடி அவ்வளவு எளிதில் உதிரவும் உதிராது.

தேங்காய்பால் மற்றும் கற்றாழை :

தேங்காய்ப்பாலில் கற்றாழையைக் கலந்து கொள்ளுங்கள் மூடியை பல பகுதிகளாக பிரித்து ஒவ்வொன்றிலும் இந்த கலவையை தடவி வட்டமாக மசாஜ் செய்யுங்கள் தேங்காய்ப்பால் மண்டைப் பகுதிக்கு ஊட்டம் அளித்து வேர்க்கால்களைப் பலப்படுத்தி முடி வளர்ச்சியைத் தூண்டும்.

தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் ஆலிவ் எண்ணெய்யுடன் மற்றும் கருவேப்பிலை பொடி நெல்லிக்காய் பொடி

தேங்காய் எண்ணெய் நல்லெண்ணெய் ஆலிவ் எண்ணெய் ஆகிய மூன்றையும் சம அளவு எடுத்து லேசாக சூடாக்கவும் கருவேப்பிலை பொடி நெல்லிக்காய் பொடி ஆகிய மூன்றையும் தலா ஒரு டீஸ்பூன் எடுத்து சூடான எண்ணெயில் போட்டு அடுப்பை அணைத்து விடவும், தலையில் தடவி விரல் நுனிகளால் மசாஜ் செய்யவும், பிறகு வெந்நீரில் நனைத்துப் பிழிந்த டவலால் தலையைச் சுற்றி கட்டவும், நான்கைந்து முறைகள் இப்படி செய்த பிறகு, சாதம் வடித்த தன்னீரில் சீயக்காய் தேய்த்து குளித்தால் போதும், இந்த முறையை வாரம் ஒருமுறை செய்து வந்தால் விரைவில் கூந்தல் உதிர்வது முற்றிலும் நின்றுவிடும்.