கரும்புள்ளி சரும சுருக்கம் போன்றவற்றையும் முற்றிலும் போக


 

கரும்புள்ளி சரும சுருக்கம் போன்றவற்றையும் முற்றிலும் போக,

இதற்காக பலரும் பலவிதமான முயற்சிகளை செய்து இருப்பீங்க அந்த வகையில் பாசிப்பருப்பை கொண்டு நிறத்தை அதிகரிப்பதோடு மட்டுமல்லாமல் கரும்புள்ளி சரும சுருக்கம் போன்றவற்றையும் முற்றிலும் போக முடியும்.

அதிக புரதம் வைட்டமின் மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் நிறைந்துள்ளது, பாசிபருப்பை முகத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் சரும சுருக்கம் கரும்புள்ளி கருமை நிறம் ஆகியவை மறைந்து சருமம் பிரகாசமாக இருக்கும், மேலும் வயதானவர்கள் கூட தோல் சுருக்கம் நீங்குவதால் இளமைத் தோற்றத்துடன் காணப்படுவார்கள்.

இதற்கு முதலில் பாசிப்பருப்பை தோலுடன் மிஷினில் கொடுத்து நன்கு அரைத்து ஈரம் படாமல் பாதுகாப்பாக வைத்துக்கொள்ள வேண்டும், இந்தப் பொடியை உங்கள் சருமங்களில் உள்ள பிரச்சனைகளுக்கு ஏற்ப எவ்வாறு பயன்படுத்துவது என்று பார்க்கலாம்.

பொதுவாக வயது அதிகமாக அதிகமாக சருமம் மேடு பள்ளமாக முகத்தில் சீரில்லாத நிறத்துடன் இருக்கும், இதற்கு சிறந்த மருந்து இது தான் ஒரு ஸ்பூன் பாசிப் பருப்புப் பொடியை எடுத்து அதனுடன் சிறிது ஆலிவ் எண்ணெய் கலந்து முகத்தில் தடவுங்கள் 15 நிமிடங்கள் கழித்து முகம் கழுவிய பிறகு பாருங்கள் இது மிக மென்மையான சருமத்தையும் அழகையும் உங்களுக்கு அள்ளிக்கொடுக்கும்.

முகப்பரு இருந்தால் அரை ஸ்பூன் பாசிப் பருப்புப் பொடியை எடுத்து அதனுடன் ஒரு ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள் 10 நிமிடங்கள் கழித்து முகத்தை கழுவுங்கள், இதேபோன்று தினமும் செய்து வந்தால் ஒரே வாரத்தில் முகப் பருக்கள் மறைந்துவிடும்.

முக தேகத்தை பளபளப்பாக அதிகரிக்க ஒரு ஸ்பூன் பாசிப் பருப்பு பொடியுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் மாஸ்க் போல போடுங்கள் பத்து நிமிடங்கள் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும், தினமும் இவ்வாறு செய்யும்பொழுது உங்கள் நிறம் அதிகரிப்பதை நீங்கள் கண்கூடாக காணலாம்.

உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறுக்கு பதில் பால் சேர்த்து கலந்து கொள்ள வேண்டும், உங்கள் முகத்தில் உள்ள சுருக்கம் நீங்க பாசிப் பருப்பு பொடி ஒரு ஸ்பூன் எடுத்து அதில் ரோஸ் வாட்டரை கலந்து பேஸ்ட் போல செய்யுங்கள், இதனை முகம் கழுத்து போன்ற பகுதிகளில் மேல் நோக்கி தடவ வேண்டும் 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள் தினமும் இவ்வாறு இரவில் செய்து வந்தால் சுருக்கங்கள் மறைந்து இளமை ஆக நீங்கள் இருப்பீர்கள்.

பங்சனுக்கு போகணும் ஆனால் முகம் நன்றாக இருக்க இந்தப் பாசி பருப்பு பொடி உங்களுக்கு கைகொடுக்கும், ஒரு ஸ்பூன் பாசிப் பருப்பு பொடியுடன் தயிர் கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவுங்கள் மிருதுவான சருமம் கிடைக்கும் ஒரு ஸ்பூன் பாசிப் பருப்பு பொடியுடன் பாலாடையை கலந்து முகம் கழுத்து போன்ற பகுதிகளில் தடவி காய்ந்ததும் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவுங்கள் இது பட்டுப்போன்ற மிருதுவான சருமத்தை கொடுக்கும் வாரம் இருமுறை இதனை செய்து பாருங்கள்.