பேரீச்சம்பழம் யார் சாப்பிடனும் சாப்பிட கூடாது என்று தெரியுமா?


 பேரீச்சம்பழம் யார் சாப்பிடனும் சாப்பிட கூடாது என்று தெரியுமா?

பேரீச்சம்பழம் யார் சாப்பிடனும் சாப்பிட கூடாது என்று தெரியுமா?, வணக்கம் பேரீச்சம்பழம் உலர் பழ வகைகளில் முக்கியமான ஒன்று, பாலைவனப் பகுதிகளில் அதிகம் விளையும் ஒரு மரமாக பேரிச்சம்பழம் மரம் இருக்கிறது இதன் மருத்துவ குணங்கள் மற்றும் தனிப்பட்ட சோகையின் காரணமாக மக்களால் அதிகளவு பயன்படுத்தப்படுகிறது பேரிச்சம்பழத்தில் வளமான அளவில் ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளதால் தினமும் பேரிச்சம் பழத்தை உட்கொண்டு வந்தால் உடலுக்கு கிடைக்கும் அற்புத நன்மைகள் என்னவென்று பார்க்கலாம். அதேநேரத்தில் யாரெல்லாம் பேரிச்சம் பழத்தை சாப்பிடக்கூடாது என்பதையும் பார்க்கலாம்.

பேரிச்சம்பழத்தில் எளிய சர்க்கரை மூலக்கூறுகளை சுக்ரோஸ், குளுக்கோஸ் மற்றும் பிரக்டோஸ், வைட்டமின்கள் ஏ சி பி1 பி3 பான்டோதெனிக் அமிலம் போலேட் போன்றவைகளும் தாது உப்புக்களான பொட்டாசியம், கால்சியம், காப்பர், மெக்னீசியம் மாங்கனீஸ், பாஸ்பரஸ், இரும்பு, துத்தநாகம் செலினியம் போன்ற கார்போஹைட்ரேட், புரதம் நார்ச்சத்து, பீட்டா கரோட்டின், போன்றவை காணப்படுகின்றன.

ஒவ்வொரு பழமும் அதன் அளவையும் பொறுத்து 60 முதல் 70 கலோரி எரிசக்தி கொண்டிருக்கும், இதனால் உடலுக்கு கிடைக்கும் நன்மைகள் குறித்து இப்பொழுது பார்க்கலாம்.

பேரிச்சம் பழத்தில் இரும்புச் சத்து அதிக அளவு இருக்கின்றது, எனவே இரும்புச்சத்து குறைவினால் ஏற்படும் நோய்க்கு இந்த பழம் மிகச் சிறந்த மருந்தாகும், இந்த பழத்தினை உண்டு ரத்த உற்பத்தியை பெருக்கி சோர்வு மற்றும் பலவீனத்தை சரி செய்யலாம்.

நோயாளிகள், குழந்தைகள், வயதானவர்கள் என தினந்தோறும் சில பேரிச்சம் பழங்களைப் சாப்பிட்டாலே அவர்களின் உடல் பலம் பெறும் கருவுற்றிருக்கும் பெண்களும் பேரிச்சம் பழங்களை அதிகம் சாப்பிட்டு வருவது, அந்தப் பெண்களுக்கும் அவர்களின் வயிற்றில் வளரும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது.

பேரிச்சம் பழத்தில் காணப்படும் சோடியம் மற்றும் மெக்னீசியம் போன்றவை நரம்பு மண்டலத்தை வளப்படுத்துகின்றன.

தினசரி உணவில் இந்த பழத்தினை அளவோடு எடுத்துக் கொண்டால் நரம்பு மண்டலம் வலுப்பெறும் எனவே தினமும் காலை மற்றும் இரவு வேளைகளில் சில பேரிச்சம் பழங்களை நன்கு மென்று சாப்பிட்டு விட்டு சூடான பசும் பால் அருந்தினால் நரம்புகள் வலுப் பெற்று நரம்பு சம்பந்தமான குறைபாடுகள் அனைத்தும் நீங்கும், மேலும் நரம்பு பாதிப்பால் ஏற்படும் அல்சைமர், பார்கின்சன், போன்ற நோய்கள் ஏற்படாமல் இந்த பழம் பாதுகாக்கின்றது.

பேரிச்சம் பழத்தில் காணப்படும் தாதுப் பொருள்களான செலினியம், மாங்கனீஸ், காப்பர் மெக்னீசியம், கால்சியம் போன்றவை எலும்புகளை பலப்படுத்துகின்றன, எலும்பு பலவீனத்தால் ஏற்படும் மூட்டு வாதம், கீல் வாதம் போன்ற நோய்களையும் குணப்படுத்துகின்றது, இந்த பழத்தில் காணப்படும் மாங்கனீஸ் சத்து உடல் உட்கிரகிக்கும், கால்சியத்தின் அளவை அதிகரிக்கின்றது, எனவே பேரிச்சம்பழத்தை சாப்பிட்டு பற்கள் மற்றும் எலும்புகளை பலம் அடையச் செய்யலாம்.

உடல் உழைப்பின்றி இருப்பது நார்ச்சத்து குறைந்த உணவுகளை சாப்பிடுவது அடிக்கடி துரித உணவுகளை சாப்பிடுவது போன்ற பழக்கங்கள் பெரும்பாலானோருக்கு மலச்சிக்கல் ஏற்படுவதற்கு ஒரு காரணமாக இருக்கின்றது, மலச்சிக்கலால் அவதிப்படுபவர்கள் தினமும் மூன்று வேளை உணவை சாப்பிடுவதற்கு முன்பு சில பேரிச்சம் பழங்களைச் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல் பிரச்சனை நீங்கும்.

கண்களில் ஏற்படும் அனைத்துக் கோளாறுகளையும் இது சரி செய்கின்றது, ஒவ்வொருவருக்கும் கண் பார்வை தெளிவாக இருப்பது அவசியமாகும், உணவில் ஏற்படும் ஊட்டச்சத்து குறைபாடுகள் சிலருக்கு கண் பார்வை மங்குதல், மாலைக் கண் நோய் போன்ற குறைபாடுகள் ஏற்படுகின்றன, தினமும் அல்லது இரண்டு நாட்களுக்கு ஒரு முறையாவது பேரிச்சம் பழங்கள் சாப்பிடுபவர்களுக்கு கண்களின் பார்வைத் திறன் மேம்படும், கண் குறைபாடு பிரச்சினை ஏற்படுவதையும் தடுக்கும்.

ஒல்லியாக இருப்பவர்கள் தேவையான அளவுக்கு சதை போடுவதற்க்கு பேரிச்சம் பழம் உதவுகின்றது, ஒரு மனிதனுக்கும் அவரின் வயது மற்றும் உயரத்திற்கு ஏற்ற எடை இருப்பது அவசியமாகும் மிகவும் மெலிந்த தேகம் கொண்டவர்கள், இயல்பான எடை குறைவான உடல் எடை கொண்டவர்கள், பழங்களை நன்கு அரைத்து அதை சூடான பாலில் தினமும் மூன்று வேளையும் அருந்தி வந்தால் உடல் எடை பெருகும் நீண்ட நேரம் செயலாற்றும் சக்தியையும் உடலுக்கு கொடுக்கும்.

நீரிழிவு நோயாளிகள் இனிப்பு தன்மை கொண்ட உணவுகளை குறைத்து சாப்பிட மருத்துவர்களை அறிவுறுத்தப்படுகின்றனர், ஆனால் உடலுக்கு நன்மையை கொடுக்கும் வகையான இயற்கையான இனிப்பு சக்திகளைக் கொண்ட உணவுகளை நீரிழிவு நோயாளிகள் சாப்பிடலாம், அப்படியான ஒரு இனிப்பு சத்து கொண்ட இயற்கை உணவாக பேரிச்சம்பழம் இருக்கின்றது, எனவே சர்க்கரை நோயாளிகள் தினமும் இரவு ஒரு பேரிச்சம் பழம் மட்டும் சாப்பிட்டு வாருங்கள் பேரீச்சம் பழங்களில் ஆன்டி-ஆக்ஸிடன்ட்டுகள் மற்றும் நார்ச்சத்து அதிகம் இருப்பதால் இதனை சாப்பிட நீரிழிவு நோயாளிகளுக்கு உடலில் பலத்தைக் கொடுக்கிறது.

வயிற்று பிரச்சனைகளையும் சரி செய்யவும் பேரிச்சம் பழம் உதவுகின்றது, பேரிச்சம் பழங்களை தொடர்ந்து சாப்பிட்டு வருபவர்களுக்கு சிறுநீரக புற்று குடல் புற்று போன்றவை ஏற்படும் ஆபத்து மிக மிகக் குறைவு என மருத்துவ ஆய்வுகளை மேற்கொண்ட ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றனர்.

பேரிச்சம்பழத்தை யாரெல்லாம் சாப்பிடக்கூடாது உடல் எடை அதிகம் உள்ளவர்கள் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிடக்கூடாது அல்லோ ஒன்றிற்கு மேற்பட்ட பற்கள் சொத்தையாக உள்ளவர்கள் இந்த பேரிச்சம் பழத்தை சாப்பிடக்கூடாது ஒரு வயதுக்கும் குறைவான குழந்தைகளுக்கு பேரீச்சம் பழத்தைச் சாப்பிடக் கொடுக்கக் கூடாது சர்க்கரை நோயாளிகள் அதிகம் சாப்பிட வேண்டாம் அவ்வாறு சாப்பிடுவதால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு அதிகரிக்க தொடங்கும் எனவே முன்பு சொன்னது போல ஒன்று அல்லது அதிகபட்சம் இரண்டு பேரீச்சம் பழங்களை தினமும் சாப்பிடலாம்.

பேரிச்சம்பழம் வாங்கும்போது பார்த்து வாங்க வேண்டும் ஏனென்றால் பேரிச்சம்பழம் நீண்ட மாதங்கள் கெடாமல் இருப்பதற்காக மெழுகு மற்றும் ஒரு சில வேதிப் பொருட்கள் கலந்து விற்பனை செய்கிறார்கள், எனவே எச்சரிக்கையுடன் வாங்கவும்.

எண்ணிலடங்காத நன்மைகளை உள்ள இந்த பழத்தை தினமும் மூன்று வீதம் சாப்பிட்டால் ஹீமோகுளோபின் அளவு தொடர்ச்சியாக நார்மல் நிலையில் இருக்கும்.