நலங்கு மாவின் பயன்கள் மற்றும் அழகு குறிப்புகள்


 நலங்கு மாவின் பயன்கள் மற்றும் அழகு குறிப்புகள்:

நலங்கு மாவின் பயன்கள் மற்றும் அழகு குறிப்புகள், வணக்கம் நம் முன்னோர்கள் பயன்படுத்திய பல பொருட்களை நாமும் பயன்படுத்தியிருந்தால் உடலை மிகவும் ஆரோக்கியமா, அழகாக வைத்திருக்கலாம்.

பொருட்கள் தயாரிக்க பல மூலக்கூறுகள் தேவை என்ற நிலையில் காலப்போக்கில் கிடைக்காத நிலையில் பல பொருட்களின் அருமையே தெரியாமல் போய்விட்டது அதில் ஒன்றுதான் நலங்குமாவு.

இந்த நலங்கு மாவின் பயன்கள் என்ன, நலங்குமாவு நாமே தயாரித்து பத்திரப்படுத்தி வைத்துக் கொண்டால் அதன் முழுப் பயன்களை பெற முடியும் மேலும் செலவும் மிச்சம் இதற்கான பொருட்கள் உங்கள் அருகிலுள்ள நாட்டு மருந்துக்கடைகளில் கிடைக்கின்றது.

பெண்களுக்கு உள்ள மிகப்பெரிய பிரச்னை முகப்பரு, கரும்புள்ளிகள், கண்ணைச் சுற்றிக் கருவளையம் மேலும் பொதுவான பிரச்சினையாக முகப் பொலிவினை, வியர்வை துர்நாற்றம் போன்றவை தான் இதனை சரிசெய்ய முடியும்.

முகம் வெள்ளை நிறத்தில் இருக்க வேண்டும் அழகான சருமம் வேண்டும் என்பதே அனைவரின் அதை உடனடியாக வெள்ளையாக மாற்ற முடியாது ஆனால் சருமத்தை ஆரோக்கியமாக பராமரிப்பதன் மூலம் பொலிவான தோற்றத்தைப் பெற முடியும்.

தோல் ஆரோக்கியமாக இருக்க வேண்டியது அவசியம் தோலில் ஏற்படும் சில முக்கிய பிரச்சினைகளுக்கு பக்கவிளைவுகள் இல்லாத இயற்கை பொருள் நலங்குமாவு தான்.

சிலருக்கு கொப்புளங்கள் கட்டிகள் உருவாகி அதுவே பெரிய தொகை கொடுத்து விடும் வெயில் சுட்டெரித்து வெளியில் செல்லவே பயப்படுவார்கள் நலங்கு மாவைத் தேய்த்துக் குளிப்பதன் மூலம் எந்த ஒரு சரும நோய்களும் நம்மை அண்டாது.

முக்கியமான விஷயம் நலங்கு மாவைத் பெரியவர்கள் தான் பயன்படுத்த வேண்டும் என்று இல்லை மூன்று மாத குழந்தைகளுக்கும் கூட பயன்படுத்தலாம் இதனால் சருமம் பாதுகாக்கப்படுகிறது.

இப்பொழுது நலங்கு மாவு எப்படி தயாரிப்பது என்பது குறித்து பார்க்கலாம் இதற்கான பொருட்கள் மளிகைக் கடைகளிலும் நாட்டு மருந்து கடைகளிலும் கிடைக்கும் இதில் பெரும்பாலும் உங்களுக்கு கிடைத்துவிடும், ஒரு சில பொருட்கள் கிடைக்கவில்லை என்றாலும் பரவாயில்லை, இப்பொழுது தேவையான பொருட்கள் குறித்து பார்க்கலாம்.

கடலைப் பருப்பு 100 கிராம், பாசிப்பருப்பு 100, கிராம் ஆவாரம் பூ 50 கிராம், வசம்பு 15 கிராம், ரோஜா மொக்கு 50 கிராம், விதை 50 கிராம், கருஞ்சீரகம் 25 கிராம், தூள் 50 கிராம், வெட்டிவேர் 50 கிராம், விலாமிச்சை வேர் 50 கிராம், நன்னாரி வேர் 50 கிராம், கோரை கிழங்கு 50 கிராம், பூலாங்கிழங்கு 50 கிராம், கஸ்தூரி மஞ்சள் 50, கிராம் வெந்தயம் 50 கிராம், மஞ்சள் 50 கிராம் மற்றும் பூந்திக்கொட்டை 50 கிராம் அனைத்தையும் ஒரு நாள் நல்ல வெயிலில் காய வையுங்கள் நன்கு காய்ந்ததும் மெஷினில் கொடுத்து அரைத்து பிறகு ஆறவைத்து காற்றுப்புகாத டப்பாவில் அடைத்து வைத்து தேவையான அளவு எடுத்து உபயோகியுங்கள்.

ஆண்கள் கூட இந்த நலங்கு மாவு பயன்படுத்தலாம், ஆண்கள் பயன்படுத்தும் போது மஞ்சள் சேர்க்காமல் மற்ற பொருட்களைக் கொண்டு தயாரித்துக்கொள்ளுங்கள் இன்று இந்த மருத்துவ தகவல் உங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் என்று நம்புகின்றோம்