தினமும் இரண்டு வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்


 தினமும் இரண்டு வெங்காயத்தை சாப்பிட்டு வந்தால் உடலில் ஏற்படும் மாற்றங்கள்.

வணக்கம் நமது வீட்டில் தினந்தோறும் சமையலுக்கு பயன்படுத்தும் ஒரு முக்கியமான பொருள் வெங்காயம், வெங்காயம் வெறும் உணவுப் பண்டமாக மட்டுமின்றி அற்புதமான மருத்துவ ஆற்றல் படைத்த ஒரு பொக்கிஷமாக இருக்கிறது என்ற உண்மையை மிகவும் தொன்மைக் காலத்திலேயே நமது நாட்டு மக்கள் அறிந்திருந்தார்கள் என்பதற்குச் சான்றுகள் இருக்கின்றன. தினமும் இரண்டு சின்ன வெங்காயத்தை பச்சையாக ஒரு மண்டலம் அதாவது 48 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உங்கள் உடல் ஆரோக்கியத்தில் நடக்கும் மாபெரும் மாற்றத்தை பற்றி அறிவீர்களா.

வெங்காயத்தில் மிகவும் வைட்டமின் சத்துகள் அதிகமாக உள்ளது, குறிப்பாக பச்சை வெங்காயத்தில் வைட்டமின் சி சத்து அதிகமாக இருக்கின்றது, பெரும்பாலும் வெங்காயத்தை பச்சையாக உண்ணுவதன் மூலமே அதிலுள்ள சத்துக்களை முழுமையாகப் பெற முடியும்.

வெங்காயத்தில் கொழுப்புச் சத்து மிக மிகக் குறைவு அதனால் உடல் பருமனைக் குறைத்துக்கொள்ள விரும்புவோர் உணவில் வெங்காயத்தைத் தாராளமாகச் சேர்த்துக் கொள்ள வேண்டும், ரத்த விருத்திக்கும் இரத்த சுத்தத்திற்கும் வெங்காயம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது, இதனால் உடல் அழகு ஏற்படுகின்றது, உணவோடு வெங்காயத்தைச் சேர்த்துக் கொள்ளும்போது அந்த உணவு வெகு எளிதில் ஜீரணமாக வெங்காயம் உதவுகிறது,

பல்வேறு காரணங்களால் உஷ்ணம் அதிகரிக்கும்போது வெங்காயம் உடல் உஷ்ணத்தை சமப்படுத்துகின்றது, நாடித் துடிப்பைச் சீராக வைத்திருக்க உதவும் ஆற்றலும் வெங்காயத்துக்கு இருக்கிறது, மூளையின் ஆற்றலை வலுப்படுத்தும் சக்தி வெங்காயத்துக்கு இருக்கிறது, அது நல்ல உடல் தேற்றும் டானிக்காகவும் திகழ்கிறது, ஆகவே தினமும் சின்ன வெங்காயத்தை அடிக்கடி சாப்பிட வேண்டும்.

சின்ன வெங்காயத்தை தோலை உரித்து அதோடு சிறிது வெல்லத்தைச் சேர்த்து அரைத்து சாப்பிட பித்தம் குறையும், பித்த ஏப்பம் மறையும் வெங்காயச் சாற்றையும் தேனையும் கலந்து அல்லது வெங்காயச் சாற்றையும் குல்கந்தையும் சேர்த்து சாப்பிட்டால் சீதபேதி நிற்கும், பச்சை வெங்காயம் நல்ல தூக்கத்தை கொடுக்கும் பச்சை வெங்காயத்தை தேனில் கலந்து சாப்பிடுவது நல்லது வெங்காயம் வயிற்றிலுள்ள சிறுகுடல் பாதையை சுத்தப்படுத்துகிறது, செரிமானத்திற்கு உதவுகின்றது.

வெங்காயம் ரத்த அழுத்தத்தை குறைக்கும் இழந்த சக்தியை மீட்கும் தொடர்ந்து புகைப்பிடிப்பவர்கள் ஒரு சின்ன வெங்காயத்தை பச்சையாக மூன்று வேளையும் சாப்பிட்டு வந்தால் நுரையீரல் சுத்தமாகும் வெங்காயத்தில் இன்சுலின் இருக்கின்றது, நீரழிவு நோயாளிகள் தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டு வந்தால் நீரிழிவு நோய் கட்டுக்குள் வரும், உடல் முழுவதும் ரத்தம் சீராக இருக்கவும், ரத்த விருத்திக்கும் இரத்த சுத்தத்திற்கும், வெங்காயம் மிகவும் உதவிகரமாக இருக்கிறது.

எனவே தினமும் இரண்டு சின்ன வெங்காயத்தை சாப்பிட்டு வாருங்கள் ரத்தம் உற்பத்தியாகி இதயம் சீராக இயங்க தொடங்கும் இதனால் உடல் அழகு ஏற்படுகின்றது, முக்கியமாக மாரடைப்பு நோயாளிகள் ரத்தநாள கொழுப்பு உள்ளவர்கள் சின்ன வெங்காயம் சாப்பிடுவது மிகவும் நல்லது வைட்டமின் சி தவிர வெங்காயத்தில் வைட்டமின் பி12 வைட்டமின் ஏ வைட்டமின் கே மற்றும் தயமின் உட்பட பல வைட்டமின்கள் நிறைந்துள்ளன மேலும் இவைகளில் காப்பர் பாஸ்பரஸ் மக்னீசியம் பொட்டாசியம் குரோமியம் மாங்கனீஸ் மற்றும் நார்ச்சத்துக்கள் மூலங்களாக இருக்கின்றன, இதனால் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உடல் ஆரோக்கியம் மேம்படுகிறது.

தினமும் இரண்டு வெங்காயம் சாப்பிட்டு வருவதால் கண் நோய் மற்றும் மற்ற கண் பிரச்சனைகளுக்கு நல்ல தீர்வை வழங்குகிறது வெங்காயத்தை துண்டு துண்டாக நறுக்கி விளக்கெண்ணெயில் வதக்கி சாப்பிட மலச்சிக்கல் குறையும், தினமும் மூன்று வெங்காயம் சாப்பிட்டு வந்தால் பெண்களுக்கு ஏற்படும் மாதவிலக்கு சிக்கல் நீங்கும் தண்ணீர் அதிகம் குடிக்காமல் வெயிலில் வெகுநேரம் அலைந்து திரிபவர்களுக்கு நீர்க்கடுப்பு பாதிப்பு ஏற்படும், இவர்கள் ஒரு வெங்காயத்தைப் பொடியாக நறுக்கி ஒரு டம்ளர் தண்ணீரில் போட்டுக் கொதிக்க வைத்து அந்தத் தண்ணீரைக் குடித்தால் நீர்க்கடுப்பு உடனே நின்றுவிடும்.

இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் இரண்டு பச்சை வெங்காயத்தை சாப்பிட்டு வருவது நல்லது வெங்காயத்தாள் இரத்தத்தில் உள்ள கொழுப்பு அளவுகளை குறைக்க உதவுகிறது, முக்கியமான விஷயம் என்னவென்றால் தினமும் இரண்டு வெங்காயத்தை பச்சையாக மென்று சாப்பிட்டு வந்தால் சிறுநீர் நன்கு வெளியாகும், மூட்டு வலியின் காரணமாக நடக்கக்கூட முடியாமல் அவதிப்பட்டு வருபவர்கள் வெங்காயச் சாற்றுடன் கடுகு எண்ணெய் சிறிது கலந்து வழி வரும் நேரத்தில் அந்த சாற்றினை மூட்டின் மீது தடவி வந்தால் வலி குணமாகும்.

சிலர் திடீரென மயங்கி விழுந்து மூச்சு பேச்சு இல்லாமல் ஆகி விடுவார்கள் அந்த சமயத்தில் வெங்காயத்தை கசக்கி முகரவைத்தால் மயக்கம் தெளிந்துவிடும் வெங்காயத்தை வதக்கி தேன் விட்டு இரவில் சாப்பிட்டு வந்தால் ஆண்மைக் குறைவு சரியாகிவிடும் நமது மூளையின் செயல்திறனை அதிகப்படுத்தும் சக்தி வெங்காயத்திற்கு இருக்கின்றது.

நமது உடலையும் மூளையையும் தேற்றும் ஒரு மருந்தாக இது பயன்படுத்தப்படுகின்றது எனவே வெங்காயத்தை தினமும் சூப் வைத்துக் குடித்து வரலாம் இரவு உறங்கப் போவதற்கு முன்பு ஒரு கோப்பை சூப் குடித்து வந்தால் அது நமது ஆரோக்கியத்திற்கு மிகவும் நல்லது எனவே வெங்காயம் உருவத்தில் சிறியதாக இருந்தாலும் மருத்துவ பயன்களை தருவதில் பெரிது என்று உணர்ந்து அனைவரும் தினமும் இரண்டு வெங்காயத்தை சாப்பிட்டு வருவது மிகவும் அவசியம்.copy the below code