கழுத்து பகுதியில் உள்ள கருமை நிறம் மறையனுமா?


 கழுத்து பகுதியில் உள்ள கருமை நிறம் மறையனுமா?

கழுத்து பகுதியில் உள்ள கருமை நிறம் மறையனுமா? நமது உடலில் மடிப்புகள் உள்ள இடங்களான கழுத்துப் பின்புறம், அக்குள், முழங்கை முழங்கால் மற்றும் ஆடை அணியும் இடுப்பு பகுதி ஆகியவை கருமை நிறத்திற்கு மாறும். இது பொதுவான ஒன்று இதனை விரைவாக உங்கள் தோல் நிறத்திற்கு மாற்றிவிடலாம்.

குறைவான கருமை நிறம் இருந்தால் பத்து நிமிடம் போதுமானது ஆனால் அதிக கருமை நிறத்தில் இருந்தால் தினம் பத்து நிமிடம் என நான்கு நாட்கள் மாற்றிவிடலாம்.

முதலில் ஒரு பௌலில் தேங்காய் எண்ணெயை ஊற்றுங்கள் அதில் சிறிளவு கோல்கேட் பேஸ்ட் விட்டு, ஒரு ஸ்பூன் மூலம் நன்றாக கலக்குங்கள் கோல்கேட் டூத் பேஸ்ட்ல கால்சியம் கார்பனேட் இருக்கின்றது, இது அழுக்குகளை நீக்கி வெண்மை நிறத்தைக் கொடுக்கும் அடுத்ததாக பேக்கிங் சோடா கால் ஸ்பூன், உப்பு தூள் அரை ஸ்பூன் ஆகியவற்றை அதோடு சேர்த்து நன்றாக கலக்குங்கள் பேக்கிங் சோடாவில் பிளீச்சிங் செய்யும் தன்மை உண்டு என்பதை நீங்கள் அறிவீர்கள், கோல்கேட் மற்றும் பேக்கிங் சோடா இரண்டும் வெளிப்பூச்சு என்பதால் சேர்த்து வைக்கின்றோம் மற்றபடி உங்களுக்கே தெரியும் உணவாக எடுத்துக் கொள்ளக்கூடாது.

இப்போது நன்றாக வெள்ளி நிறத்தில் பேஸ்ட் கிடைத்திருக்கும், இப்போது இந்த பேஸ்ட்டை உடலில் உள்ள கழுத்து பின்புறம், அக்குள் முழங்கை முழங்கால் போன்ற ஏதேனும் ஒன்றில் அப்ளை செய்யுங்கள் பிறகு அரை மூடி எலுமிச்சம் பழத்தால் 10 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்து விடுங்கள் ஒரே நேரத்தில் பல இடங்களில் அப்ளை செய்ய வேண்டாம், ஒவ்வொரு பகுதிக்கும் பத்து நிமிடம் ஒதுக்கவேண்டும் என்பது மிக முக்கியம், சரியாக 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவிய பிறகு பார்த்தால் கருமை நிறம் இருந்த இடம் தெரியாமல் போயிருக்கும் வியந்துபோவீர்கள் தானே.

மேலும் சில கருமை நீக்கம் செய்து டிப்ஸ்களும் இருக்கு அதையும் பார்த்து விடுங்கள் உருளைக்கிழங்கு ப்ளீச்சிங் தன்மை அதிகம் இருக்கின்றது, எனவே இது நமது சருமத்தில் எந்த ஒரு பக்கவிளைவும் ஏற்படாது என்பதால் உருளைக்கிழங்கை வெட்டி அதில் 10 நிமிடம் மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும்.

அடுத்ததாக தயிர் மஞ்சள் தூள் தேன் மற்றும் சிறிது எலுமிச்சை சாறு ஆகியவற்றை ஒன்றாக கலந்து அதனை அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும் இப்படி 5 நாட்கள் தொடர்ந்து செய்து வந்தால் நல்ல பலன்கிடைக்கும்.

வெள்ளரிக்காய் நமது சருமத்தின் கருமை நிறத்தை போக்கி குளிர்ச்சியுடன் சருமத்தை வைத்துக் கொள்ள உதவுகின்றது எனவே தினமும் வெள்ளரிக்காயை வெட்டி கருமை நிறம் உள்ள இடங்களில் தடவி உலர வைக்க வேண்டும்.

எலுமிச்சம் பழத்தைப் போன்றே ஆரஞ்சு பழத் இருக்கும் கருமை நிறத்தை போக்கும் சக்தி இருக்கின்றது, அதற்கு ஆரஞ்சு பழத்தின் தோலை உலர வைத்து பொடி செய்து அத்துடன் பால் மற்றும் ரோஸ் வாட்டர் சேர்த்து கலந்து பேஸ்ட் செய்து அக்குளில் தடவி 10 நிமிடம் ஊற வைத்து அதன் பிறகு குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும். மேற்கண்ட தகவலையும் அனைத்து குறிப்புகளையும் பயன்படுத்தி பாருங்கள்.