இப்படியும் கொசுக்களை விரட்ட முடியுமா?


 இப்படியும் கொசுக்களை விரட்ட  முடியுமா?

இப்படியும் கொசுக்களை விரட்ட  முடியுமா? மழைக் காலம் ஆரம்பம் அதனால் நமது வீட்டில் கொசுவின் தொல்லையும் அதிகமாகத்தான் இருக்கும், கதவு மற்றும் ஜன்னல்களை திறந்தவுடன் வீட்டிற்குள் நுழையும் கொசுக்கள் நமது வீட்டில் மறைவான இடத்தில் ஒளிந்து கொள்ளும், நிறைய பேர் வீடுகளில் கொசுவை விரட்டுவதற்காக கடையிலிருந்து வாங்கி வந்த மெஷின் கொசுவர்த்தி தான் பயன்படுத்துவார்கள் அதனால் கொசுத்தொல்லை குறைவதற்கு வாய்ப்பு இருக்கின்றது, ஆனால் அதில் உள்ள கெமிக்கல் நமது ஆரோக்கியத்தை சீர்குலைக்கும், இயற்கையான முறையில் நமது வீட்டிலுள்ள கொசுக்களை விரட்ட மிக மிக சுலபமான ஒரு சில வழிகளைப் பற்றி தான் இந்த பதிவின் மூலம் தெரிந்து கொள்ளப் போகின்றோம்.

ஒரு சிறிய பாத்திரத்தை எடுத்துக் கொள்ளுங்கள் உங்கள் வீட்டில் கம்ப்யூட்டர் சாம்பிராணி கட்டாயம் இருக்கும், ஒரு சிறிய கிண்ணத்தில் உள்ளே வைத்து அந்தக் கிண்ணத்தை பாத்திரத்தின் உள்ளே வைத்துவிடுங்கள் வேப்பிலைகள் நிறைய இடங்களில் சுலபமாகவே கிடைக்கின்றது, அந்த வேப்பிலைகளை எடுத்து வந்து நான்கு கம்ப்யூட்டர் சாம்பிராணி வைத்திருக்கும் கிண்ணத்தின் மேலே போட்டு விட்டாலே போதும் சாம்பிராணி புகையோடு இந்த வேப்பிலை வாசமும் கலந்து உங்கள் வீடு முழுவதும் பரவ ஆரம்பிக்கும் மாலை நேரங்களில் உங்கள் வீட்டில் இந்த புகையை போட்டு விடுங்கள் சிறிது நேரம் கட்டிலுக்கு அடியிலும் இந்த பாத்திரத்தை வைத்து விடலாம், அந்த புகையானது கட்டிலின் அடியில் பரவியதும் வேப்பிலை வாசனை அந்த இடத்தில் ஒட்டிக் கொள்ளும் கொசுக்கள் அடுத்த 24 மணி நேரத்திற்குள் அந்த இடத்தில் தங்காது என்பது குறிப்பிடத்தக்கது மீண்டும் அடுத்த நாள் மாலை இதே போல செய்ய வேண்டும்.

கொசுவை விரட்டுவதற்காக சிறப்பு எண்ணெயும் தயாரிக்கலாம் நாட்டு வேப்ப எண்ணெய் 50 மில்லி எடுத்துக்கொண்டு அதில் ஐந்து கற்பூர வில்லைகளைப் பொடி செய்து அந்த எண்ணெயில் போட்டு நன்கு கலக்கவேண்டும், கற்பூரம் கரைந்து பிறகு அதை காலியான கொசுவிரட்டி இயந்திரத்தில் ஊற்றி மின்சாரத்தில் இயங்கச் செய்ய வேண்டும், அப்போது அந்த திரவம் ஆவியாகி வீடு முழுவதும் பரவி கொசுவை அண்ட விடாது செய்யும் அடுத்து ஒரு லிட்டர் விளக்கெண்ணைய் அதாவது ஆமணக்கு எண்ணெய் கால் லிட்டர், வேப்ப எண்ணெய் இரண்டையும் ஒன்றாக கலந்து வீட்டில் படுக்கையறை, சமையலறையில் ஊற்றி பஞ்சு திரி இட்டு எரிய விட்டால் கொசுக்கள் உள்ளே வராது.

எலுமிச்சம்பழம் ஒன்று இரண்டாக அறுத்து அதனுள் எட்டு அல்லது பத்து இலவங்கப் பூ வைத்து அதனை வீட்டின் நடுப் பகுதியில் வைத்தால் கொசுக்கள் வீட்டிற்குள் வராது.

கற்பூர எண்ணெய், லாவண்டர் எண்ணெய், ரோஸ்மேரி எண்ணெய், லெமன் க்ராஸ் எண்ணெய், மேலும் வேப்பெண்ணெய் போன்ற சில எளிதில் ஆவியாகும் எண்ணெய் க்கு கொசுக்களை விரட்டும் சக்தி உண்டு, இவை உடலுக்கு எந்தத் தீங்கும் விளைவிக்காது, இந்த எண்ணெய்கள் அனைத்தும் நாட்டு மருந்து கடையில் மலிவான விலையில் கிடைக்கின்றது, இதனை ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி தெளித்து விடலாம்.

கற்பூரவல்லி மற்றும் கற்றாழைச் சாற்றை தண்ணீருடன் சேர்த்து ஸ்ப்ரே பாட்டிலில் ஊற்றி வீட்டில் ஸ்ப்ரே செய்து கொசுவை விரட்டலாம்.

புதினா இலைகளை சிறிது தண்ணீர் விட்டு அரைத்து வீடு முழுவதும் தெளிக்க வேண்டும், இதன் வாசனை பிடிக்காமல் கொசுக்கள் உங்கள் வீட்டு பக்கமே வராது.

தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெயுடன் சில துளிகள் லாவண்டர் எண்ணெயை விட்டு கலந்து சருமத்தில் தேய்த்தால் நல்ல வாசனை வரும் கொசுவும் நெருங்காது.

இலைகளை காய வைத்து வீடு முழுவதும் புகை போட்டால் கொசுக்கள் வீட்டினுள் நுழையாது அடுத்து பூண்டு எண்ணெயையும், தண்ணீரையும் 1க்கு 5 என்ற விகிதத்தில் கலந்து வீட்டின் ஜன்னல்களில் கட்டி வைத்தால் கொசுக்கள் தொல்லை இருக்காது அடுத்து பூண்டு வாசனை கொசுக்களுக்கு பிடிக்காது, பூண்டை நசுக்கி கீழே போகாமல் தண்ணீரில் விட்டுக் கொதிக்க வைத்து அதை ஸ்பிரே பாட்டிலில் போட்டு ஸ்ப்ரே செய்யலாம் அல்லது பூண்டுக்கு மாற்றாக பூண்டு எண்ணையுடன் 5 மடங்கு நீர் கலந்து பஞ்சில் நனைத்து ஆங்காங்கே போட்டு விட்டாலும் அதன் வாசனைக்கு கொசுக்கள் வராது ஆனால் பூண்டு வாசனை இருக்கும் வரைதான் கொசுக்கள் வராமல் இருக்கும் அதை அப்படியே வைத்திருந்தால் வாசனை போனதும் அதிலேயே கொசுக்கள் முட்டையிடும் அதனால் அவ்வப்போது பூண்டு எண்ணெயில் நனைத்த பஞ்சை மாற்றிவிட வேண்டும்