அழகான மற்றும் மிருதுவான சருமத்தை பெறுவதற்கு


 

அழகான மற்றும் மிருதுவான சருமத்தை பெறுவதற்கும், அதன் மீதான ஈர்ப்பு அதிகரித்துள்ளது அதற்கு அவர்கள் பல்வேறு வகையிலான அழகு சிகிச்சைகள் மற்றும் விலைமதிப்பற்ற முகப் பூச்சுக்கள் போன்றவற்றை பயன்படுத்துகின்றனர், இதில் கெமிக்கல் பயன்பாடு அதிகம்.

ஆகையால் நாம் இயற்கையான முறையில் எளிதாக கிடைக்கும் ஆர்கானிக் பொருட்களை வைத்து வீட்டிலேயே நிரந்தரமான முக அழகைப் பெறலாம், இதற்கு எந்தவித பின்விளைவுகளும் வராது.

நாம் இங்கே குறிப்பிட போகும் இயற்கையான பொருட்களை பற்றி பார்ப்போம்.

பாதாம் எண்ணெய் :

அதில் முதன்மையானது பாதாம் எண்ணெயில் வைட்டமின் ஈ மற்றும் பிற சக்திவாய்ந்த ஆக்ஸிஜனேற்ற பொருட்கள் அதிகம் இருக்கின்றது, பாதாம் எண்ணெய் அதனுடைய பல்வேறு வகையான சருமம் உள்ளவர்கள் அனைவரும் நன்மைகளுக்காக எல்லோராலும் பாராட்டப் படுகின்றது, இந்த பாதாம் எண்ணெய்யோடு மற்றொரு பொருள் சேர்த்து ஏழு விதமான அழகு குறிப்புகளை பார்க்கலாம்.

இவற்றில் ஏதேனும் ஒன்று திரண்டு செய்தாலே போதும், பிறகு முக பொலிவையும் அழகையும் பெறலாம்.

தேன் மற்றும் பாதாம் :

ஒன்று அரை தேக்கரண்டி தேன் மற்றும் பாதாம் எண்ணெயை ஒன்றாக எடுத்து இரண்டையும் நன்றாக கலக்குங்கள் இந்தக் கலவையை முகத்தில் தடவுங்கள், அதன் பிறகு இந்த கலவையை ஒரு இரவு முழுவதும் ஊற விடவும் மறுநாள் காலையில் வெதுவெதுப்பான தண்ணீரில் முகத்தை கழுவவும் அழகான மற்றும் மிருதுவான சருமத்தை பெறுவதற்கும் வாரத்துக்கு இரண்டு முதல் மூன்று முறை முயற்சி செய்து பாருங்கள்.

ஆலிவ் எண்ணெய் மற்றும் பாதாம் :

ஒரு தேக்கரண்டி ஆலிவ் ஆயிலுடன் அரை தேக்கரண்டி பாதாம் எண்ணெய் சேர்க்கவும் இந்த கலவையை சுமார் 5 முதல் 10 நிமிடம் மெதுவாக மசாஜ் செய்யுங்கள் அதன் பின்னர் ஒரு மிருதுவான துணியால் சுத்தப்படுத்தி மற்றும் வெந்நீர் வைத்து முகத்தை சுத்தம் செய்யுங்கள் அழகான மற்றும் மிருதுவாக மாறும் இதை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை முயற்சி செய்யுங்கள்.

தேன் மற்றும் பாதாம் :

ஒரு தேக்கரண்டி தேனுடன் அரை தேக்கரண்டி பாதாம் எண்ணெய் சேர்க்கவும், இந்த கலவையை உங்கள் முகத்தில் மெலிதாக படரவிட்டு ஒரு இரவு முழுவதும் ஊற வைத்து மறுநாள் காலையில் மிருதுவான துணியால் சுத்தப்படுத்தி மற்றும் வெதுவெதுப்பான நீர் வைத்து உங்களுடைய முகத்தை சுத்தம் செய்யுங்கள் அழகான மற்றும் மிருதுவான சருமத்தை பெறுவதற்கு இதனை வாரத்திற்கு 3 முதல் 4 முறை முயற்சி செய்யுங்கள்.

பால் மற்றும் பாதாம் :

ஒரு பாத்திரத்தில் அரை தேக்கரண்டி பாதாம் எண்ணெய் மற்றும் பால் 2 தேக்கரண்டி விட்டு நன்றாக கலக்கவும் சுத்தப்படுத்தி, இந்த கலவையை மெதுவாக உங்கள் முகத்தில் தடவி விடுங்கள் அதன் பிறகு உங்கள் முகத்தை வெதுவெதுப்பான தண்ணீர் வைத்து சுத்தப்படுத்துங்கள் அழகான சருமத்தை பெற இதனை வாரத்திற்கு இரண்டு முறை முயற்சி செய்யுங்கள்.

எலுமிச்சை மற்றும் பாதாம் :

ஒரு தேக்கரண்டி எலுமிச்சம் பழச்சாற்றுடன் அரை தேக்கரண்டி பாதாம் எண்ணை கலக்கவும் உங்கள் முகத்தின் மீது தடவி சுமார் 15 நிமிடங்கள் உலர விடவும் அதன் பிறகு உங்கள் முகத்தை வெதுப்பான தண்ணீரில் கழுவுங்கள் அழகான மற்றும் பளபளப்பான சருமத்தை பெற இந்த கலவையை வாரத்திற்கு இரண்டு முதல் மூன்று முறை பயன்படுத்துங்கள்.

படிகாரம் மற்றும் பாதாம் :

ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெயுடன் மூன்றில் ஒரு பங்கு தேக்கரண்டி படிகாரத்துடன் நன்கு கலக்குங்கள் இந்த கலவையை உங்கள் தோல் மீது மெதுவாக தடவி மிருதுவாக மசாஜ் செய்யுங்கள், அதன் பின்னர் தண்ணீர் கொண்டு முகத்தை கழுவ வேண்டும், பளபளப்பான சருமத்தை பெறுவதற்கு இந்த மாதிரி ஒரு மாதத்திற்கு இரண்டு முறை பயன்படுத்துங்கள்.

வெள்ளரிக்காய் மற்றும் பாதாம் :

வெள்ளரிக்காயின் ஒரு சில துண்டுகளை நன்றாக அதை ஒரு தேக்கரண்டி பாதாம் எண்ணெயுடன் நன்கு கலக்குங்கள் இந்தக் கலவையை உங்கள் முகத்தில் நன்கு தடவி 10 நிமிடங்களுக்கு ஊற விடுங்கள் அதன்பிறகு மிருதுவான துணியால் சுத்தப்படுத்தி, சுத்தம் செய்யுங்கள் அழகான மற்றும் மிருதுவான சருமத்தை பெறுவதற்கு இதை வாரத்திற்கு இரண்டு முறை முயற்சி செய்யுங்கள்.