வெந்நீர் குடிப்பதால் இப்படி ஒரு நன்மையா?


 வெந்நீர் குடிப்பதால் இப்படி ஒரு நன்மையா?

வெந்நீர் குடிப்பதால் இப்படி ஒரு நன்மையா? வணக்கம் காலை எழுந்ததும் வெந்நீர் குடிக்கும் பழக்கம், நமது உடல் எதிர்கொள்ளும் பெரும்பான்மையான நோய் வாய்ப்புகளை குறைக்கிறது. வயிற்றைச் சுத்தப்படுத்துவதில் வெந்நீர் இணை எதுவும் இல்லை, இன்று சூடான பொருளை நமது உடலுக்குள் செல்லும் பொழுது அதிகமாக வியர்க்கும், உடலின் வெப்பம் அதிகரிக்கும். இவ்வாறு அதிகரித்த வெப்பநிலையை குறைத்து நமது உடல் வெப்பத்தை சமநிலையில் வைத்திருப்பதும், வியர்வை உற்பத்தியாகின்றது. இதனால் நமது உடலில் உள்ள நீர் உப்புக் கழிவுகள் வெளியேறுகின்றன. இப்பயன்கள் பற்றி பார்க்கும் முன்பு உங்களிடம் ஒரு கேள்வி ஒரு நாளைக்கு நீங்கள் சராசரியாக எவ்வளவு லிட்டர் தண்ணீர் குடிக்கிறீர்கள், உங்களுக்கே தெரியும் நீங்கள் அருந்தும் நீர் உங்களுக்கு பற்றாக்குறைதான் என்று அல்லவா, தெரிந்தே உங்கள் உடலை பாதிப்படைய செய்து கொண்டிருக்கிறீர்கள்.

ஒரு மனிதன் தினமும் சுமார் மூன்று லிட்டர் தண்ணீர் பருகுவது மூலம் ஆரோக்கியமாக வாழ உதவும் என்று ஆய்வுகள் கூறுகின்றன, இவை அவரவர்களின் இடத்திற்கும் பருவநிலை மாற்றத்திற்கும் ஏற்ப மாறுபடும், ஆனால் பெரும்பாலானோர் ஒரு லிட்டர் தண்ணீர் மட்டுமே குடித்து வருகிறார்கள்.

நமது உடலில் இருக்கும் கழிவுகள் அனைத்தும் வெளியேற தண்ணீர்தான் துணைபுரிகின்றது, நீரின் அளவு குறைந்தால் கழிவுகள் வெளியேறுவதில் சிக்கல் உண்டாகும், நோய்கள் பெருகும் வெறும் வயிற்றில் சாதாரண தண்ணீர் அருந்துவதை விட சூடு தண்ணீர் குடிப்பதால் ஏராளமான நன்மைகள் உண்டாகும், இரத்த அழுத்தம், மூட்டுவலி இதயத்துடிப்பு சீராக, இருமல், மலச்சிக்கல், உடல் அசதி, ஆஸ்துமா, கருப்பையில் நோய், சிறுநீரகப் பிரச்சனை, வயிற்றுப் பிரச்சனைகள், மற்றும் தலைவலி போன்றவை வெந்நீர் பருகுவதால் இப்பிரச்சினை தீரும், எவ்வாறு என்பதை இப்பொழுது பார்க்கலாம்.

அதிகாலையில் வெந்நீர் ஊற்றும் போது காற்றில் கலந்திருக்கும் ஓசோன் வாயு, நீருடன் கலக்கும், ஓசோன் என்பது சூப்பர் ஆக்சிசன் அது நமது உடலின் சக்தியை தூண்டி விடும், சாப்பிடுவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்பு குடித்தால் செரிமானத்தை தூண்டும், நமது செரிமானத்திற்கு தேவையான பெப்சின் ரெனின் முதலான இயல்புகளைக் கொண்டுள்ளது, இவை இரைப்பையில் இருக்கும்.

தினமும் காலையில் இரண்டு டம்ளர் வெந்நீர் குடிப்பதால் இறந்த செல்கள் வெளியேற்றப்பட்டு, புது அமிலங்கள் உற்பத்தியாகின்றன, அன்றைய தினம் முழுவதும் செரிமான மண்டலம் திறனுடன் வேலை செய்வதற்கு இது உதவுகின்றது, அடுத்து முக்கியமாக மலச்சிக்கலால் அவதிப்படுபவர்களுக்கு வெந்நீர் அருமருந்து மலச்சிக்கல் ஏற்படுவதற்கு முக்கிய காரணம் அதிகமான கழிவு பொருட்கள் நமது உடலில் தங்குவது தான், இதனால் வயிற்றுவலி வயிற்று உப்புசம் போன்றவை உண்டாகி தொந்தரவு செய்யும் பொழுது, அது உணவு பொருட்களை எளிதில் செரிமானம் செய்து வெளியேற்ற உதவுகின்றது.

வெந்நீர் அருந்தும் போது ரத்த குழாய்கள் விரிவுபடுத்தப்படும் இதனால் உடல் முழுவதும் நல்ல ரத்த ஓட்டம் கிடைக்கும், செல்களுக்கு ஊட்டச்சத்து கிடைக்கும் செல்கள் புத்துணர்வுடன் இருக்கும், இதனால் நமது உடல் பலவிதமான தீங்கு விளைவிக்கும் நோய்களில் இருந்தும், தன்னை தற்காத்து கொள்கிறது, அடுத்து போதுமான அளவு வெந்நீர் அருந்தி வந்தால் சருமம் பொலிவடையும் வெண்கலம் மற்றும் தாமிர பாத்திரங்களில் வெந்நீர் காய்ச்சி அருந்துவது நல்லது, இந்தப் பாத்திரங்கள் இல்லாதவர்கள் எவர்சில்வர் பாத்திரத்தில் 4 டம்ளர் தண்ணீர் விட்டு 60 கிராம் தாமிர தட்டு அல்லது தாமிரக் கட்டியை போட்டு நன்கு கொதிக்க வைத்து அருந்தலாம் அல்லது தாமிர டம்ளரில் அருந்தலாம், நீர் அருந்துவதால் நரம்பு சம்பந்தப்பட்ட நோய்கள் குணமாகும்.

உயர் ரத்த அழுத்தம் கீழ்வாதம் போன்றவை கட்டுப்படும், உணவு மண்டலம், சிறுநீரகம் தொடர்புடைய நோய்கள் குணமாகும், சுவாச மண்டலம், நுரையீரல், இதயம், மூளை போன்றவற்றில் உள்ள கோளாறுகள் சரியாகும்.

தினமும் காலையில் நீர் அருந்துவதால் கொழுப்பு குறைந்து தொப்பை குறையும், மூன்று நாட்கள் தொடர்ந்து வெந்நீர் பருகுவதால் தீராத தலைவலி மற்றும் சர்க்கரை நோய் கட்டுப்படும், பத்தே நாட்களில் வயிற்று பிரச்சனைகள் அனைத்தும் தீரும், நன்றாக பசி எடுக்க தொடங்கும்,, கருப்பை தொடர்பான பிரச்சினைகள் குணமாகும் மேலும் ஆஸ்துமா இருப்பவர்களுக்கு அதன் தீவிரம் குறைந்துவிடும், 9 மாதங்களில் புற்றுநோய் ஏற்படக் கூடிய காரணிகள் அழிக்கப்பட்டு உடல் புத்துணர்வு பெறும், கை கால் வலிப்பு மற்றும் கை கால் முடக்கம் போன்ற பிரச்சனைகள் குறைந்து விடும்.

இந்த வெந்நீர் சிகிச்சையை துவங்கும் போது சற்று சிரமமாகத்தான் இருக்கும், பழகி போனால் சரியாகி விடும், இந்த முறைக்கு கட்டாயம் கேன் தண்ணீர் உபயோகப்படுத்த வேண்டாம், அதில் சேர்க்கப்படும் சில வேதியல் பொருள்கள் மற்றும் குளோரின் போன்றவை உகந்தது அல்ல.

மழைநீரில் உயிர்ச் சத்து இருப்பதால் சுத்தமான நீர் கொண்டு இந்த முறையை செய்தால் மேலும் சிறப்பான பலன்கள் உண்டு என்பது குறிப்பிடத்தக்கது அல்லது ஆற்று நீர், அருவி நீர் போன்ற மூலிகைச் செடிகளைத் தழுவி கொண்டு வரும் அற்புத நீரையும் பயன்படுத்தலாம். வெந்நீர் பயன்படுத்த ஆரம்பித்து விட்டு சிறிது காலம் மட்டுமே குடித்து விட்டு, விட்டு விடாமல் இரண்டு மண்டலம் அதாவது சுமார் ஓராண்டு வெந்நீர் அருந்தி வந்தால் உடலில் நோய்கள் தங்காது.